×

கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி என 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்பிக்கை :கருத்துக்கணிப்பில் தகவல்

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி என 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.
கடந்த 6 மாதங்களாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் ஒருபக்கம் அச்சம், மறுபக்கம் பொருளாதார தேவை, 3-வதாக வேலையின்மை இவற்றுடன் பசி, பட்டினி, பஞ்சம், பாதுகாப்பற்ற மனநிலை என எக்கச்சமான துன்பங்களை உலக மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்னும் தடுப்பூசி கண்டறியப்படாததால் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்நிலையில், கடவுளை நம்பும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள சர்வவல்லமையுள்ள கடவுளிடம் இருந்து வந்த செய்தி என நம்புகிறார்கள் என ஒரு கருத்து கணிப்பில் தெரிய வந்து உள்ளது.எவாஞ்சலிகல் புராட்டஸ்டன்ட்டுகள் என அடையாளம் காணப்பட்டவர்கள், கொரோனா வைரஸ் என்பது மனிதர்களின் நடத்தையை மாற்ற எச்சரிக்கும் கடவுள்  செய்தி என்று உறுதியாக நம்புவதாக, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக தெய்வீக பள்ளி ஆகியவை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
43 சதவீத எவாஞ்சலிகல் புராட்டஸ்டன்ட்டுகள் வைரஸ் கடவுளின் செய்தி என்று நம்புகிறார்கள்,

அதே நேரத்தில் 28 சதவீத  கத்தோலிக்கர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் அல்லாத புராட்டஸ்டன்ட்டுகளும் இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டனர் என்று ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்று என்பது கடவுளிடம்  இருந்து வந்த அறிகுறியாகும் என்று பதிலளித்தவர்கள் வெள்ளைக்காரர்களை விட கறுப்பு இனத்தவர் மற்றும் லத்தீன் மக்களும் அதிகமாக இருந்தனர்.கறுப்பினத்தி பதிலளித்தவர்களில் 47  சதவீதம் இது கடவுளிடமிருந்து வந்த செய்தி என்று உறுதியாக நம்பினர், அதைத் தொடர்ந்து 37 சதவீத லத்தீன் மக்களும் 27 சதவீத வெள்ளை அமெரிக்கர்களும் உள்ளனர்.மத ரீதியாக இணைக்கப்படாத பலரும் வைரஸ் உண்மையில் அதிக சக்தியில் இருந்து வந்த செய்தியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.


Tags : God ,Americans , Corona, virus, God, news, Americans, faith
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?