×

கண்ணீர் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்...: நாகையில் பல கோடி மீன் வர்த்தகம் முடக்கம்

*  ஊரடங்கு, மீன்பிடி தடை என அடுத்தடுத்து அடி
* 2 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விகுறி
நாகையில் பல கோடி மீன்வர்த்தகம் முடங்கியுள்ளன. ஊரடங்கு, மீன்பிடி தடை என அடுத்தடுத்து அடியால் 2 லட்சம் மீனவர்கள் மற்றும் மீன் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கொரோனா ஊரடங்கு தடையால் கடலோர மாவட்டங்களில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இதனால் வருவாய் இல்லாமல் மீனவர்கள் குடும்ப செலவுக்கே திண்டாடி வருகின்றனர். இதற்கிடையே ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் 60 நாள் மீன்பிடி தடைக்காலமும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை.ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைகாலத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீன் இறங்குதளம், ஏலம் விடும் இடங்கள் மூடியே கிடக்கின்றன. அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வந்து நாகையில் தங்கி மீன்பிடி தொழில் நடத்தியவர்கள் எல்லோரும் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

நாகை மாவட்டத்தில் 59 மீனவ கிராமங்களில் 1500 விசைப்படகுகள், 3ஆயிரம் பைபர் படகுகள், 1500 கட்டுமரங்கள் உள்ளன. 1 லட்சம் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த மீன் வியாபாரம், ஐஸ் கட்டி தயார் செய்தல், டீசல் ஏற்றுதல், கருவாடு தயாரித்தல் என 1லட்சம் பேர் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர். ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலைகளும் முடங்கி போய் உள்ளதால் கடல் விறால், பால் சுறா, கொடுவா, இறால், நண்டு, கனவாய் உள்ளிட்ட கடல் உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது.ஊரடங்கு தடையால் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத காரணத்தால் நாகை மாவட்டத்தில் 2 லட்சம் மீனவர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி என இதுவரை பல கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மீனவர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் மீன்பிடி தடைகாலமும் அமலில் இருப்பதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மற்றும் மீன்பிடி தடை காலம் என அடுத்தடுத்து அடியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்படும் நிவாரண தொகை ரூ. 5 ஆயிரத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழப்பு, 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் என வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு மீனவ குடும்பத்தினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ரூ. 15 ஆயிரம் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அதே போல் மீன்பிடி தொழிலை சார்ந்த மற்ற தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். அப்பொழுது தான் பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியும் என தெரிவித்தனர். மீன்பிடி தடை காலம் என அடுத்தடுத்து அடியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலங்களில் வழங்கப்படும் நிவாரண தொகை ரூ. 5 ஆயிரத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

Tags : Tens of thousands ,fishermen ,Fishermen of Tens , Tens of thousands ,fishermen , tears
× RELATED தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்!