×

தென் மாவட்டங்களில் பொள்ளாச்சி இளநீர் விற்பனை படுஜோர்

நெல்லை: தென் மாவட்டங்களில் பொள்ளாச்சி இளநீர் விற்பனை படு ஜோராக நடக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுகக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் விவசாய பொருட்களை விற்பனைக்கு கொண்டுவர அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து செவ் இளநீர், சாதாரண இளநீர் அதிகளவு தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனை தென் மாவட்ட மககள் விரும்பி குடித்து வருகின்றனர். இளநீர் குடிப்பதால் தோல் நோய்கள் தடுக்கப்படுகின்றன. தினமும் இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் கிடைப்பதால் பலர் இளநீரை விரும்பி குடிக்கின்றனர். கோடையிலில் தாகத்தை தணிக்க இளநீர் பெரும் பங்குவகிக்கிறது.

இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து விடுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை வியாபாரிகள் பொள்ளாச்சியில் இருந்து கொண்டுவந்து நெல்லை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பொள்ளாச்சியில் இருந்து லாரிகள் மூலம் நெல்லைக்கு வியாபாரிகள் 3 ஆயிரம் இளநீர் கொண்டு வரப்படுகிறது. இதனை விற்பனையாளர்கள் வாங்கி ரூ.35 முதல் 40 வரை விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனை நடைபயிற்சி செய்பவர்கள், வாகனங்களில் நெடுந்தூரம் செல்பவர்கள் இளநீரை வாங்கி பருகி செல்கின்றனர். தற்போது நெல்லை பகுதியில் வெயில்வாட்டி எடுப்பதால் இளநீர் விற்பனை படு ஜோராக நடப்பதாக விற்பனையாளர்கள்
தெரிவித்தனர்.

Tags : Southern Districts Southern Districts , Pollachi, Juice Sales, Southern Districts
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...