×

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள வவ்வால்கள்

சின்னாளபட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கப் பகுதியில் ஆயிரகணக்கில் குவிந்து வரும் பழம் தின்னும் வவ்வால்கள் அங்குள்ள மரங்களில் தொங்கி விசித்திரமான சத்தம் ஏற்படுத்துகின்றன. ஆத்தூர் ஒன்றியம் காமராஜர் நீர்தேக்க பகுதியில் மா, பலா, வாழை, நாவல், அத்திமரம், தென்னை, பனைமரம் உட்பட ஆயிரகணக்கான மரங்கள் உள்ளன. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோடைகாலங்களில் ஆயிரகணக்கான வவ்வால்கள் அங்குள்ள மரங்களில் தங்கி விசித்திரமான சத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே இரைச்சலாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கப்பகுதியில் பழங்களை தரும் மரங்கள் அதிகம் இருப்பதால் வவ்வால்கள் இங்கேயே தங்கிவிடுகின்றன. பழம் தின்னி வர்வால்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை சத்தம்தான் கொடுக்கின்றன’ என்றனர்.



Tags : catchment area ,Attur Kamarajar , Thousands , bats accumulated , Attur Kamarajar catchment area
× RELATED வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக குறைவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை