×

ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை: முன்பை விட தற்போது செய்திகளை பார்க்கும் பழக்கம் 55% அதிகரிப்பு....சைபர் பாதுகாப்பு நிறுவனம் அறிக்கை

டெல்லி: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 53 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31-ம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்து ஊழியர்கள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் காஸ்பர்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், வீட்டில் பணியாற்றும் ஊழியர்களில், 55% பேர் முன்பை விட தற்போது செய்திகளை பார்க்கும் படிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது.அதோடு தனிப்பட்ட வேலைகளுக்கும் அலுவலக லாப்டாப்பை பயன்படுத்தும் செயல் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 சதவீதம் பேர் அலுவலகத்தைக் காட்டிலும் வீட்டில்தான் அலுவலக வேலையை கூடுதல் நேரம் செய்வதாகவும் அதேசமயம் 46% பேர் தங்களின் தனிப்பட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளர். அதுமட்டுமன்றி வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத நெருக்கடி நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் வீட்டில் அலுவலகப் பணியாற்றும் ஊழியர்களில் 51% பேர் லாப்டாப்பில் வேலைகளுக்கு நடுவே ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 18% பேர் அலுவலக லாப்டாப்பிலேயே ஆபாச வீடியோக்கள் பார்பதாகவும், 33% பேர் சொந்த லாப்டாப்பில் பார்ப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். ”இந்த போக்கு ஊழியர்களுக்கு பணி மீதான கவனத்தை சிதைக்கிறது. உற்பத்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறியுள்ளது.

Tags : Benefit of curfew: 55% increase in news viewing behavior than ever before
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...