பைப்லைனில் காஸ் கசிவு: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ராட்சத பைப்லைனில் இருந்து காஸ் கசிந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.  ஆந்திராவின் ராஜோலு அடுத்த கிழக்குபாளையம் கிராமம் வழியாக ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ராட்சத பைப் மூலம் காஸ் கொண்டு செல்லப்படுகிறது.  இந்நிலையில் நேற்று காலை இந்த பைப்பில் இருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் தவித்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கினர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காஸ் கசிந்து தீப்பிடித்து 10க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  கடந்த வாரம் விசாகப்பட்டினம் எல்.ஜி.பாலிமர் நிறுவனத்தில் விஷவாயு கசிந்து 12 பேர் இறந்தனர். தற்போது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பைப் லைனில் காஸ் கசிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>