×

திருமழிசை மார்க்கெட்டில் வியாபாரம் இல்லை வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளே காரணம்

* மொத்த வியாபாரிகள் நலவாரிய சங்க தலைவர் பேட்டி

சென்னை: வியாபாரம் இல்லாத காரணத்தால் திருமழிசை மார்க்கெட்டில் மாறியுள்ள கோயம்பேடு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரும் என்று மொத்த வியாபாரிகள் நலவாரிய சங்கத் தலைவர் தியாகராஜன் கூறினார். சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதால் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும் தற்போது வியாபாரம் நடந்து வருகிறது. ஆனால் அந்த மார்க்கெட்டால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த அளவிற்கு வியாபாரம் இல்லை. பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் கூறினர்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரிகள் நலவாரிய சங்கம் தலைவர் தியாகராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தித்து பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் காய்கறிகள், சில்லறை காய்கறி கடைகள், பழம், பூ மார்க்கெட்டில் உள்ள சுமார் 3,941 கடைகள் உள்ளன. இதில் 20,000 குடும்பங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தாய் உள்ளத்தோடு கோயம்பேடு வணிகவளாகத்தை பாதுக்காப்போடு மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி வாங்கும் வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.

திருமழிசையில் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளை போல் கோயம்பேட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வியாபாரிகள் அதை கடைபிடிக்க தயாராக உள்ளனர். அதேபோல் கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவ அதிகாரிகளே காரணமே தவிர வியாபாரிகள் காரணம் இல்லை. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : corona spread ,merchants , Tiramisu Market, Business, Merchants, Corona
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...