×

தியேட்டர்களில் மதுபானம் விற்கலாம் இயக்குனர் சர்ச்சை

கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்கள் இன்னும் சில மாதங்களுக்கு திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்கள் திறந்தால் மக்கள் முன்பு போல் படம் பார்க்க வரவேண்டும். அதற்கு தியேட்டர்களில் மதுபானம் விற்கலாம் என்று இயக்குனர் நாக் அஸ்வின் யோசனை கூறியுள்ளார்.கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிக கூட்டம் வருவதற்கு திரையரங்குகளில் அனுமதி பெற்று பீர் உள்பட மதுபானங்களை விற்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் தியேட்டர்களில் மதுபானங்கள் விற்பனை செய்தால் பெண்கள் வர தயங்குவார்கள் என்று நெட்டிசன்கள் கூற, அதற்கு நாக் அஸ்வின், அனைத்து தியேட்டர்களிலும் தேவையில்லை, ஒருசில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் இப்போதைக்கு மது விற்பனை செய்யலாம். வெளிநாடுகளில் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தியேட்டர்களில் மது பானம் விற்கலாம் என்று இயக்குனர் கூறிய யோசனைக்கு நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags : theaters , Theater, brewery, director
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...