×

சொகுசு காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் பல்லவன் சாலையில் இருந்து சொகுசு கார் மூலம் வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த ஒரு கார் மின்னல் வேகத்தில் பறந்தது. போலீசார் விரட்டி சென்று, அந்த காரை மடக்கி பிடித்து, சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பெரம்பூர் திருவிக நகர் 20வது தெருவை சேர்ந்த அமுதா (39) மற்றும் கார் டிரைவர் பாண்டியன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூரில் 1500 கிலோ ரேஷன் அரிசியுடன் பிடிபட்டது தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் 17ம் தேதி திருவிக நகரில் இருந்து வெளி மாநிலம் கடத்த முயன்ற 2500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதில் இவர்கள் மூளையாக இருந்ததும் தெரியவந்தது. நீண்ட நாட்களாக இவர்களை கைது செய்ய குடியுரிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் திட்டமிட்ட நிலையில் நேற்று இருவரும் வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.Tags : Luxury car, 1 ton ration rice seized, woman, 2 arrested
× RELATED விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன்