×

பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றபோது கொரோனா வார்டை பார்த்து அதிர்ச்சியில் பெண் பலி: ராயபுரத்தில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாதிக்கப்படும் நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு, ஸ்டான்லி, ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் மற்றும் பன்னோக்கு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர். நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேற்கண்ட மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்கின்றனர்.

அங்கு, பரிசோதனை முடிவில் அறிகுறி உள்ளவர்களை தனிமை வார்டுக்கும், நோய் தொற்று உள்ளவர்களை சிறப்பு வார்டிலும் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி உள்ள ஒரு பெண்ணை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றபோது, சிறப்பு வார்டை பார்த்து அதிர்ச்சியில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம், ராமன் தெருவை சேர்ந்தவர் தேன்மொழி (44). சமீபத்தில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே, வீடு வீடாக ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தேன்மொழிக்கு ரத்த பரிசோதனை செய்ய, கடந்த 2 நாட்களுக்கு முன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, கொரோனா சிகிச்சை மையத்தை பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, இறந்தது தெரிந்தது. அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இல்லை, என தெரியவந்தது. பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Corona ,hospital ,ward , Examination, Hospital, Corona, Female Kills, Raipur
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...