×

முகக் கவசம், கிருமி நாசினி கூடுதலாக வழங்க கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயமணி கால்நடை மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சுமார் 2 மாதங்களாக பொதுமக்களும், கால்நடைகளும் பயன்பெறும் வகையில் கால்நடை நிலையங்களை திறந்து வைத்து சேவை ஆற்ற வேண்டும் என்ற  நோக்கத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முழுமையாக பணிபுரிந்து வருகிறார்கள்.  இந்நிலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் முகக் கவசங்களும், 3 ஆயிரம் கிருமி நாசினிகளும் வழங்கப்பட்டன.
 
அதில் கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படும் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகங்கள், பண்ணைகள் மற்றும் கால்நடை நிலையங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் விடுபட்டுள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய வகையில் முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் 2 வது தவணையாக  5 லட்சம் முகக் கவசங்கள், 10 ஐயிரம் கிருமி நாசினிகள் வழங்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Livestock Assistance Association , Face shield, antiseptic, corona, curfew
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்