×

சில்லி பாயின்ட்...

* ஐசிசி டி20 உலக கோப்பை போட்டித் தொடர் தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார்.
* டென்னிஸ் நட்சத்திரங்கள் அங்கிதா ரெய்னா, திவிஜ் ஷரண் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்க இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.
* ஆஸ்திரேலியாவில் ஜூன் 6ம் தேதி முதல் கிளப் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன.
* கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரது சாதனைகள் பிரமிக்கத்தக்கவை என்று இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரோகித் ஷர்மா புகழ்ந்துள்ளார்.
* ஸ்டீவன் ஸ்மித், சச்சின் டெண்டுல்கரை விட விராத் கோஹ்லி தான் சிறந்த வீரர் என்று இங்கிலாந்து அணி முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
* இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சென்று நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இன்றைய சூழலில் அந்த தொடர் சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : ICC T20 World Cup , ICC T20 World Cup Series
× RELATED சில்லி பாயின்ட்...