×

சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். துறைமுகம் தொகுதியில் மங்கல வாத்தியம் வாசிப்போர்கள் 180 பேருக்கும், எழும்பூர் தொகுதியில் 126 போதகர்களுக்கும், திரு.வி.க நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் 200 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி மற்றும் பி2 காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம், சோப்பு, என்95 முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு 68 - தீட்டி தோட்டம் 4வது தெரு, செம்பியம் வியாபாரிகள் நலச்சங்கம் -  கிழக்குப் பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 2500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோயில் தெருவிலுள்ள துறையூர் நாடார் திருமண மண்டபத்தில், மேற்கு பகுதியிலுள்ள பாக முகவர்கள், பேஜ் கமிட்டி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 2500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர், வார்டு 67 - எஸ்.ஆர்.பி கோயில் தெருவிலுள்ள நால்வர் திருமண மண்டபத்தில், கொளத்தூர் தொகுதியிலுள்ள 85 ஓவியர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி, வார்டு 66 - ஜவஹர் நகர் அலுவலகத்தில்,  ஜிம் பயிற்சியாளர்கள் 160 பேருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

மேலும், வார்டு 67 - ஜி.கே.எம் காலனி 24வது தெருவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.மகேஷ்குமாரின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் பேருந்து நிலையத்தில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அம்பத்தூர் எஸ்டேட்டில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கும், அருந்ததியின மக்கள் 50 பேருக்கும் அரிசி, உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.மங்களபுரத்தில் கடந்த மாதம் 26ம் தேதி மாரடைப்பால் மறைந்த அம்பத்தூர் மேற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.வினோத் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 பின்னர், வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட, வில்லிவாக்கம் கிழக்கு பகுதி வட்டம் 97ல் கடந்த 4ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்த வட்டச் செயலாளர் னிவாசன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, தாயகம்கவி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chennai ,MK Stalin ,locations , Chennai, Corona, Relief Assistance, MK Stalin
× RELATED அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து