×

போதை தகராறில் 3 பேர் கொலை

திருச்சி: தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் 2 தினங்களில் 15 பேர் கொலை செய்யப்பட்டனர். அடுத்த 2 தினங்களில் ஐகோர்ட் தடைவிதித்ததால் கடைகள் மூடப்பட்டன. தற்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்றுமுன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் முதல் நாளில் ஒரு கொலையும், நேற்று 3 கொலைகளும் நடந்துள்ளன.

திருச்சி  ரங்கத்தில், விக்னேஸ்வரன் (19) என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகன் தாக்கப்பட்டதை தட்டிக்கேட்ட ஜீவானந்தம்(45) போதை கும்பலால் கொல்லப்பட்டார். புதுக்கோட்டையில் தனேஷ்குமார்(25)  என்பவரை தமிழரசன் (33) மதுபாட்டிலால் குத்தி கொன்றார்.

Tags : drug dispute Drug dispute ,kills , 3 killed ,drug dispute
× RELATED மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்: டிரைவர் பலி