×

பழங்குடியின பெண்ணின் உடலை அடக்கம் செய்ய இடம் தர மறுத்த ஊர் மக்கள்: 3 கி.மீ தூரம் சுமந்து சென்று இறுதி சடங்கு

பண்ருட்டி: பண்ருட்டி  அருகே இருளர் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் அனுமதி மறுத்ததால் 3  கி.மீ தூரம் சுமந்து சென்று ஏரியில் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு  ஊருக்கு ஒதுக்குப்புறமாக பழங்குடியினத்தை சேர்ந்த இருளர்கள் வசித்து  வருகின்றனர். இங்கு வசித்து வருபவர் பாலு. இவரது மனைவி வள்ளி (45) சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பண்ருட்டி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் குணமடையாத நிலையில்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வள்ளி இறந்தார்.

உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஊர் மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து, உங்களுக்கு உடல்அடக்கம் செய்ய இடம் கொடுக்க முடியாது என  மறுப்பு தெரிவித்தனர். எவ்வளவோ கேட்டுக்கொண்டும் உடலை அடக்கம் செய்ய ஊர்  மக்கள் அனுமதிக்காததால், இருளர் இனத்தினர் வள்ளியின் உடலை சுமார் 3 கிலோ மீட்டர்  தூரம் சுமந்து சென்று பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பட்டறை  ஏரியில் அடக்கம் செய்தனர். பழங்குடியின பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கப்பட்டது அப்பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : rite , Tribal, female. Body burial, town people, funeral
× RELATED செப்டம்பர் 12-ம் தேதி நடந்த நீட் தேர்வை...