×

நேபாளம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு... இதுவரை 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

காத்மாண்டு: கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் நேபாளம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் பாதிப்பு குறைவாக இருந்து வருகிறது. அங்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த 8-ம் தேதி கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றுள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் இதுவரை 281 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 36 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்குக் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாளை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags : Nepal ,country , Nepal, Corona, First Death, Health Department Information
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது