×

ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆன் லைனில் வழக்குகள் தாக்கல் செய்வது குறித்து மனுதாரர்கள், வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க 1881 என்ற புதிய உதவி எண்ணை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு, ஆன் லைனில் வழக்குகள் தொடுக்கும் முறையை உச்சநீதிமன்றம் அண்மையில் அறிமுகம் செய்தது.

அந்த முறை புதிது என்பதால் அதுகுறித்து பலருக்கும் கேள்விகள் எழும் என்பதை கருத்தில் கொண்டு, ஹெல்ப்லைன் எண்ணை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஹெல்ப்லைன் எண் மூத்த சட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் செயல்படும் எனவும், அதில் வழக்கறிஞர்கள், மனுதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் முடங்கியது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக கடந்த மே 15-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து ஆன் லைனில் வழக்குகள் தாக்கல் செய்வது குறித்து மனுதாரர்கள், வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க 1881 என்ற புதிய ஹெல்ப்லைன் எண்ணை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது.

Tags : Supreme Court , Online, Cases, Introduction, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...