×

கொரோனாவை அரசால் தடுக்க முடியாது.. அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடப்பதாகவும் ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது, அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடப்பதாகவும் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872-ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து  3-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில் அரசு அடுத்தக்கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கவுள்ளது என பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்ட ட்விட்:  கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது.

இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றனஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : government ,Corona ,Can't Stop Corona , Corona, p.Chidambaram, tweet
× RELATED ஏற்கனவே தாய் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு அரசு அதிகாரி பலி