×

கொரோனா தொற்று பரிசோதனைகளை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும்?.. அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகளை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் என மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொற்று குறைந்து வருவதாகக் காட்ட பரிசோதனைகளை குறைக்க கூடாது. கொரோனா பரிசோதனை  பற்றி போலிக் கணக்கு காட்டி பொதுமக்களை ஏமாற்றாதீர்கள் என்றும் அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் மே 7-ம் தேதி 14,102-ஆக இருந்த கொரோனா பரிசோதனை 16-ம் தேதி 8,270-ஆக குறைந்துள்ளது. மே 7-ம் தேதியோடு ஒப்பிட்டால் 10 நாளில் கொரோனா பரிசோதனை 40% குறைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை சுமார் 40% குறைத்து கொரோனா தொற்றை குறைத்து காட்ட அரசு முயற்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வது விபரீதத்தை விளைவிக்கும். கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது என்று மருத்துவர்கள் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பரிசோதனை மூலம் கொரோனா பரவலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் குழு கூறிய பிறகும் பரிசோதனைகளை தமிழக அரசு குறைப்பது எதற்காக?.

பரிசோதனைகளை அதிகப்படுத்தி அதன் மூலம் கொரோனா பரவல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். பரிசோதைகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக ஒளிவு மறைவின்றி வெளியிட வேண்டும். பரிசோதனை நடத்தாமல் வரலாற்றுப் பழியை வாங்கி சுமக்க வேண்டாம் என்றும் அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Stalin ,Trial coronary infection tests , Corona infection, examination, government, Stalin
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...