×

வி.கே.புரம் அருகே 6வது முறையாக கூண்டில் பிடிபட்டது சிறுத்தை

வி.கே.புரம்: மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட வேம்பையாபுரத்தில், கடந்த மார்ச் 7ம் தேதி ஏப்.12ம் தேதிவரை 5வது முறை சிறுத்தைகள் சிக்கின. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும் வேம்பையாபுரத்தில் 6வது முறையாக வைக்கப்பட்ட கூண்டில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கியது. கடந்த 2 மாதங்களில் ஒரே இடத்தில் சிக்கிய 6வது சிறுத்தை இதுவாகும். சம்பவ இடத்திற்கு சென்ற முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் கூண்டில் சிக்குவதால், பொதுமக்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.

Tags : VK Puram , Leopard caught , cage ,6th time, VK Puram
× RELATED விகேபுரம் அருகே கீழகொட்டாரத்தில் பொங்கல் விளையாட்டு விழா