×

மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கடன் பெறும் வரம்பு படிப்படியாக உயர்த்தப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கடன் பெறும் வரம்பு படிப்படியாக உயர்த்தப்படும். ஒரு நாடு ஒரே ரேஷன் , தொழில் தொடங்க ஏதுவான சூழல், மின் பகிர்மானம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தினால் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம். மாநிலங்கள் தம் ஜிடிபி மதிப்பில் 5% வரை கடன் வாங்க அனுமதி வழங்கப்படும். தற்போது 3% ஆக உள்ள கடன் வாங்கும் வரம்பை 5% ஆக தளர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Nirmala Sitharaman ,states ,government , Central Government's Plan, Implementation, Credit to States
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...