×

இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், ரூ. 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Tags : Nirmala Sitharaman. ,announcements , Today's announcement, 5 announcements, Economic Development and the Union Finance Minister Nirmala Sitharaman
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...