×

அதிக பாதிப்புள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக தேர்வு மையங்கள் அமையுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு துணை செயலாளர் ஆணை

சென்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 5012 தேர்வு மையங்கள்  மட்டுமே இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 12 ஆயிரமாக தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்படும். இ-பாஸ் வழங்குவதில் தடை ஏற்படாத வகையில் தனி கவனம் செலுத்தப்படும்.

நுழைவுச்சீட்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் மலை பிரதேசம் என்பதால், அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம். தமிழகத்தில் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது. கூடுதல் தேர்வு  மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்காக 21ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் என்ற  நிலையை மாற்றி ஒரு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு துணை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.  வட்டாரத்துக்கு 2 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்க வேண்டும். சிறப்புத் தேர்வு மையத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும். அதிக பாதிப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களில் அதிக மையங்கள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : selection centers ,districts ,Deputy Secretary ,Head Teachers ,Chennai ,centers , Increasingly, there are more centers in the districts including Chennai:
× RELATED நெகட்டிவ் பப்ளிசிட்டி தலைவரா...