×

ஆவடி மாநகராட்சியில் கொரோனா பாதிப்பில் அதிமுக பிரமுகர் பலி

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று வரை 130க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 100 பேர் சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி டாக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள, செவிலியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவடி மாநகரட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரான 63 வயது முதியவர், சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இவர், சென்னை அரசு பன்நோக்கு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்தார்.  இவருக்கும் டயாலிசிஸ் செய்த டெக்னீஷியனுக்கு கடந்த 13ம் தேதி கொரொனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் டெக்னீஷியன் மூலம் ரத்த சுத்திகரிப்பு செய்த 5 பேரை கண்டறிந்து பரிசோதனை செய்தனர். அப்போது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை கடந்த 14ம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை  இறந்தார். ஆவடி மாநகராட்சியில் கொரேனாவுக்கு முதல் உயிரிழப்பை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Awadhi Corporation ,Coroner , Awadhi Corporation, Corona, Prime Minister kills
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு