×

எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளைக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளைக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் டிரஸ்டியாக அறக்கட்டளை நிறுவனரின் குடும்பத்தை சேர்ந்த முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் கிரிஜா சியாம் சுந்தர் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடும்போது, குடும்ப உறுப்பினர் என்ற காரணத்தினால் அறக்கட்டளையின் டிரஸ்டியாக வந்திருக்கும் முரளிதரன் அறக்கட்டளையின் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக தனது சொந்த சொத்துக்களாக மாற்றி வருகிறார். இதே நிலை நீடித்தால் அறக்கட்டளை கடுமையான சரிவை சந்திக்கும். எனவே, எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளைக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும், என்று வாதிட்டார்.

அறக்கட்டளை சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, வழக்கு தொடர்ந்தவர்கள் இந்த கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள். தங்களின் சொந்த காரணங்களுக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே அறக்கட்டளையின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



Tags : Judge ,Etraj College Trust , Etheraj College Trust, Judge, Petition dismissed
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...