×

அதிக விலை கொடுத்துவிழிப்புணர்வு பேனர் வாங்க கட்டாயப்படுத்தும் போலீசார்: வியாபாரிகள் புகார்

தாம்பரம்: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்படும் கடைகளில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி கடைகளுக்கு போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேனர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் பேனர்களுக்கு 150 முதல் 250 வரை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு பேனர்கள் சேலையூர் போலீசார் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த பேனரில் வைரஸ் நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து வாசகங்கள் அடங்கியுள்ளது.

இதுபோன்ற பேனர்கள் வியாபாரிகள் தாங்களாகவே தயார் செய்து அவர்களது கடைகளில் வைத்துள்ளனர். ஆனாலும் போலீசார், அவர்கள் கொடுக்கும் பேனர்களை பணம் கொடுத்து கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அவ்வாறு வாங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கடைகளை திறக்க அனுமதிப்பதில்லை. ஊரடங்கு உத்தரவால் நஷ்டம் ஏற்பட்டு, வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஆனால் எங்கள் நிலை தெரிந்தும் போலீசார் இந்த நேரத்திலும் பணம் சம்பாதிக்க நினைப்பது மிகவும் வேதனையாக உள்ளது. போலீசார் சார்பில் கொடுக்கப்படும் பேனர் விலை அதிகபட்சம் 50தான் இருக்கும், ஆனால் 100 முதல் 200 வரை கூடுதலாக எங்களிடம் வசூலிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றர்.

Tags : merchants , High prices, cops, merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...