×

கொரோனா, புயல் பாதிப்புகளை சமாளிக்கபேரிடர் மேலாண்மை திட்டத்தில் மாற்றம்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 5ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க ேவண்டும். கொரோனா வைரஸ் தொற்றுள்ள இந்த சூழ்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, புயலை எதிர்கொள்ள மிக சரியான நேரத்தில் தயார் நிலைக்கு வரவேண்டும். இதற்காக சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்படுகிறது.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் திருத்தங்களை கலெ க்டர்கள் மேற்கொள்ள வேண்டும். பிபிஇ சோதனை உபகரணம், முகக்கவசம் போன்றவை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
* முன்னிலையில் நின்று பணியாற்றுவோர், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக பணிகளை கவனிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
* புயலுக்காக மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* அதிகளவில் தங்கும் இடங்கள், நிவாரண முகாம்களை அமைத்து அங்கு நெரிசல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கும் இடங்கள், முகாம்களில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
* தனிமைப்படுத்தும் இடங்கள் புயலால் பாதிப்பு வராத வகையில் பாதுகாக்க வேண்டும்.
* செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக உள்ளூர் மாவட்ட மொழிகளில் ஊடகங்கள் மூலம் அவ்வபோது தெரிவிக்க வேண்டும்.
* ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருக்கும் சூழலில் புயல் பாதிப்பு வந்தால் இரண்டையும் சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும்.

Tags : Coroner ,Collectors Coroner ,Storm Impact Change , Corona, Storm, Collectors
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு