×

சிறப்பு விமானங்களில் வந்தவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த9 பேருக்கு மட்டுமே கொரோனா

சென்னை: துபாய், மலேசியா, ஓமன், வங்கதேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து என வெளிநாடுகளிலிருந்து 9 சிறப்பு விமானங்களில் வந்த பயணிகளில் 9 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.  சென்னை வந்த துபாய், மலேசியா, ஓமன், வங்கதேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து ஆகிய  நாடுகளில் 9 விமானங்களில் 1691 இந்தியர்கள் வந்தனர். அதில் 1088 ஆண்கள், 584 பெண்கள், 19 குழந்தைகள் அடங்குவர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் நட்சத்திர சொகுசு ஓட்டல்களிலும் இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பயணிகளில் பலர் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்க ஆர்வம் காட்டினர். 1115 பேர் சென்னை நகரில் உள்ள 9 நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ளனர். மீதி 576 பயணிகள் மட்டுமே இலவச தங்கும் இடத்திற்கு சென்றனர்.  துபாய், மலேசியா, குவைத், நாடுகளில் இருந்து வந்தவர்களே அதிகமாக இலவச தங்கும் இடத்தை தேர்வு செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இவர்கள் 1691 பேருக்கும் நடந்த மருத்துவ பரிசோதனையில் குவைத்தில் இருந்து வந்த 4 பேருக்கும், மலேசியாவில் இருந்து வந்த 5 பேர் என 9 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது தெரிய வந்தது.



Tags : flights ,Corona ,one ,overseas , Special flights, Corona
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...