×

வடமாநில தொழிலாளர்கள் பிற வாகனங்களிலோ நடந்தோ சொந்த ஊர் செல்ல வேண்டாம்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  தினந்தோறும் சுமார் 10,000 வெளி மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வெளி மாநில தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர்களின் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயண செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ, செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : state workers ,Northern , Northern Territory Workers, Vehicles, Chief Edapady
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...