×

முட்டை விலை 3 நாளாக தினமும் 5 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 3வது நாளாக நேற்றும், முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 345 காசாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில், நேற்று என்இசிசி 5 காசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து முட்டையின் விலை  345 காசாக அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை, கடந்த 3 நாட்களாக தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது.



Tags : Egg, prices rise
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...