×

டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து ₹200க்கு விற்ற மோசடி கும்பல்: போலீசிடம் சிக்கிய 20 குடிமகன்கள்

கடலூர்: கடலூரில் டாஸ்மாக் கடையில் போலி டோக்கனை 200-க்கு பெற்று மதுபாட்டில்கள் வாங்க முயன்ற 20 பேர் பிடிபட்டனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று காலை விற்பனை தொடங்கியது. தொடர்ந்து மது வாங்க வந்தவர்களிடம் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. போலீசார் முன்னிலையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் மது பாட்டில்கள் வாங்குவதற்கு டோக்கன் பெற்றவர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே குறிப்பிட்ட 500 டோக்கன் எண்களையும் தாண்டி கூட்டம் இருந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலியாக டோக்கன் வைத்திருந்த 20 பேர் சிக்கினர். தீவிர விசாரணையில் 100 பேருக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்ட டோக்கன் கொண்டு கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு பின்னர் 200 ரூபாய்க்கு ஒரு டோக்கன் விற்கப்பட்டு அதைப் பெற்ற 20 பேர் மது வாங்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 20 பேரிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Tags : citizens ,Xerox ,Soldier gang , Token, Xerox, police
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...