×

நலிவடைந்தை வக்கீல்களுக்கு 2 ஆயிரம்

சென்னை: ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட நலிவடைந்த 90  வக்கீல்களுக்கு ஐகோர்ட் லா அசோசியேஷன் தலா ₹2 ஆயிரம் நிவாரணம் வழங்கியது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வக்கீல்கள் வருமானம் இன்றி அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக  உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தி லா அசோசியேஷன் என்ற பழமையான வக்கீல்கள் சங்கம் சக வக்கீல்களுக்கும் நன்கொடை திரட்டி இளம் வக்கீல்களுக்கும்  மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 90 வக்கீல்களுக்கும் முதல் தவணையாக தலா ₹2,000 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் நன்கொடை அளித்து உதவிய சக வக்கீல்களுக்கு சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.



Tags : nullity advocates , Lawyers, 2 Thousand, Corona, Curfew
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...