×

வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வர வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களில் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொரோனா அச்சத்தில் இருப்பதோடு, போதிய பொருளாதார வசதியும் இன்றி சிரமப்படுகிறார்கள். இவர்கள் தமிழகம் திரும்ப அனுமதி கேட்டிருப்பினும் இன்னும் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.  இந்நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் குடும்பங்கள் வேதனையில் இருக்கின்றனர்.

தமிழர்களை விரைவில் அழைத்து வர கோரிக்கை வைக்கின்றனர். அதே போல நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.   எனவே மத்திய அரசு - வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை தமிழகத்துக்கு விரைவில் அழைத்து வர சிறப்பு விமான சேவையை மேற்கொள்ளவும், உள்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பவும் ஏற்கனவே மேற்கொண்ட முயற்சியை விரைவுப்படுத்தி உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamils ,Gulf ,countries ,government ,GK Vasan , Gulf States, Tamils, Central Government, GK Vasan
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு