×

விவசாயிகள் நலன் கருதி பொட்டாஷ் உரம் மூட்டைக்கு 75 குறைப்பு: நிறுவன தலைவர் அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் நலன் கருதி பொட்டாஷ் உரம் மூட்டைக்கு 75 குறைத்து விற்கப்பட உள்ளது என்று இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் பொட்டாஷ் நிறுவன தலைவர் டாக்டர் பி.எஸ்.கெலாட் வெளியிட்ட அறிவிப்பு:  இந்தியா முழுவதும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தற்போது விவசாயிகளை இந்த பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில் பல்வேறு நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. மேலும் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.  விவசாய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடலாம் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடக்க தொடங்கியுள்ளது.

 இந்நிலையில், விவசாயிகள் நலன் கருதி பொட்டாஷ் உரம் மூட்டைக்கு 75 குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேவை புரிந்து வரும் இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மேம்படுத்தும் வகையில், முக்கிய விவசாய இடுபொருளான பொட்டாஷ்(எம்ஓபி) உரத்திற்கு இன்று முதல் மூட்டைக்கு முந்தைய விலையாகிய 950 லிருந்து 75 குறைத்து 875க்கு குறைத்து விற்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளது.  இதற்கான அறிவிப்பை இந்தியன் பொட்டாஷ் நிறுவன தலைவர் டாக்டர் பி.எஸ்.கெலாட் வெளியிட்டுள்ளார். 


Tags : Reduction , Farmers, Potash Fertilizer, Company Head
× RELATED காஸ் விலை குறைப்பு நாடகம்: இவரே குண்டு...