×

78 ரயில்வே காவல் நிலையங்களில் சென்சார் முறையில் கைகழுவும் வாஷ்பேஷின்கள்

சென்னை: தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 78 ரயில்வே காவல் நிலையங்களில் எலக்ட்ரானிக் சென்சார் முறையில் கைகழுவும் வாஷ்பேஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா வைரசால் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
 மேலும் முககவசங்கள், கை சுத்திகரிப்பான்களை ரயில்வே பாதுகாப்படையினர் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படையின் தொழில்நுட்பக்குழுவினர் எலக்ட்ரானிக் சென்சார் முறையில் குழாயை தொடாமல் கை கழுவும் வகையில் வாஷ்பேஷின்களை வடிவமைத்துள்ளனர்.

 இந்த சென்சார் வாஷ்பேஷின்கள் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாஷ்பேஷினில் உள்ள சென்சாரின் முன் 10 முதல் 15 செ.மீ தூரத்தில் கைகளை நீட்டும்போது கிருமி நாசினியும், 20 முதல் 40 செ.மீ தூரத்தில் கைகளை நீட்டும் போது தண்ணீரும் வெளிவரும். இந்த சென்சார் வாஷ்பேஷின்கள், தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 78 ரயில்வே காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : railway stations , 78 Railway Police Stations, Sensors, Washburns
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...