×

நல வாரிய உறுப்பினர் அல்லாத முடி திருத்துவோருக்கும் 2,000 நிவாரணம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் 2 ஆயிரம் ரொக்கமாக வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை போன்றே நிவாரண தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராம புறங்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சி பகுதிகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பரிந்துரை செய்யவேண்டும். மாவட்ட ஆட்சி தலைவர்கள் மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக 2,000 ரொக்கமாக வழங்கியது போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ₹2,000 ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : CM ,board members , Welfare Board Member, Hairdresser, Chief Edapady
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!