×

சாரே... இ லோகத்தில் மூக்குல மாஸ்க் இருக்கணும்...திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வாய்,  மூக்கை நன்றாக மூடாமல், கழுத்தில் மாஸ்க்கை  தொங்கவிட்டு பொது இடங்களில் வலம் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகல்,  முகக்கவசம் அணிவது உட்பட பல  பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  பொது இடங்களில்  கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அனைத்து மாநில  அரசுகளும்  உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல்  பொது இடங்களில் வலம்வந்த வண்ணம்  உள்ளனர். கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்து வருகின்றன.  இதுதொடர்பாக  போலீசார் தினமும் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு  செய்து  வருகின்றனர். இதனால் சிலர் முகக்கவசத்தை அணியாமல்,  கழுத்தில் தொங்கவிட்டவாறு நடமாடி  வருகின்றனர்.

இந்நிலையில்  திருவனந்தபுரம் மாநகர போலீஸ்  கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா  வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் முகக்கவசத்தை  அணிவதில்லை.  இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதுபோல சிலர்  முகக்கவசத்தை வாய், மூக்கு முழுவதையும் மூடாமல் கழுத்தில்  கட்டிக்கொண்டு  செல்கின்றனர். இது தவறான நடவடிக்கையாகும். இதுபோல முகக்கவசத்தை ஒழுங்காக   அணியாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது  இடங்களுக்கு  செல்பவர்கள், கடைகள், நிறுவன ஊழியர்கள் உட்பட அனைவரும் வாய்  மற்றும் மூக்கு  வரை மூடும் வகையில் சரியாக முகக்கவசம் அணிந்திருக்க  வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvananthapuram ,world ,police commissioner ,Hyderabad , Corona, Curfew, Mask, Trivandrum Police Commissioner
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...