×

சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற கூலித்தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் தடியடி

திருமலை: ஆந்திராவின் தாடேபல்லி வழியாக புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை தங்கள் ஊருக்கு நடந்தபடி சென்று கொண்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக காரில் சென்ற மாநில முதன்மை செயலாளர் நீலம் சஹானி, நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் அனைவரையும் விஜயவாடாவில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை உணவு பெற்றவுடன் 150க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் விஜயவாடா முகாமில் இருந்து வெளியேறினர்.

பின்னர் சிலர் நடந்தபடியும், சிலர் சைக்கிளிலும் புறப்பட்டனர்.  தொடர்ந்து விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயில் பாலம் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் சிலர் அதனை கேட்காமல் முன்னேறி செல்ல முயன்றதால் போலீசார் கூலித்தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அலறி அடித்து கொண்டு கூலித்தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Tags : Andhra ,mercenaries ,Dadi ,home Wage laborers ,Andhra Bo ,home , Hometown, mercenaries, AP policemen
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...