×

அதிபர் டிரம்ப் பாராட்டு: அமெரிக்க இந்தியர்கள் சிறந்த விஞ்ஞானிகள்

புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு  அமெரிக்காவில் மட்டும் இதுவரை 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில்,  ``அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் வசிக்கின்றனர். அதே போல், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளியினர் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள்’’ என்றார். அமெரிக்காவில் 40 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேசிய சுகாதார அமைப்பு, பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உயிரி மருந்து உள்ளிட்ட மருத்துவ அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

Tags : Trump ,American Indians ,President , President Trump, America, Indians, great scientists
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...