×

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நாளை முதல் பணிகளை தொடங்க முடிவு

திருமலை: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் நாளை முதல் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நிர்வாக ரீதியான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மற்ற பணிகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் பணிகளை தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சூலூர் பேட்டையில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனைகள் அனைவருக்கும் நிறைவடைந்த பிறகு நாளை காலை 8 மணி முதல் அவர்கள் பேருந்துகள் மூலமாக இஸ்ரோ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பணிகளை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட இருந்த  2 ராக்கெட் திட்டங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் சந்திராயன் 2, ககன்யான் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : launch ,Sriharikota , Sriharikota .Address, Corona, Curfew
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!