×

அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து இதுவரை 3முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 3 வது ஊரடங்கு காலம் நாளையுடன் முடிகிறது.  இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘4ம் கட்ட ஊரடங்கு புதிய விதிமுறைகளுடன் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்,’ என்று தெரிவித்தார்.  தமிழகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு பஸ்களை இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இழந்த நாட்களை ஈடுகட்ட , வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குரூப் ஏ அதிகாரிகள் அனைத்து நாட்களும் வேலைக்கு வரவேண்டும் என்றும் தலைமை செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.  

அனைத்து அவலுவலக பணியாளர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஊழியர்கள் தங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் படி கோரிக்கை வைத்தனர். இதனிடையே சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊழியர்கள் சொந்த செலவில் பயணிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : bus facilities ,Tamil Nadu ,government offices , Government offices, employees, bus facilities, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...