×

கொரோனா நோய்க்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை : WHO அறிவிப்பு

ஜெனீவா : கொரோனா நோய்க்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆய்வுக்கூட பரிசோதனையில் (clinical trials) ஏராளமான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும், இதில் எந்த சிகிச்சை முறைக்கும் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகளுக்காக உலக சுகாதார அமைப்பு காத்திருப்பதாகவும், அதன்பிறகே எந்த சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிப்பதென முடிவு எடுக்கப்படுமென்றும் அதில் கூறியுள்ளார்.      


Tags : announcement ,WHO , Corona, Disease, Approved, Treatment, Method, So far, Approved, Not Presented, WHO, Notice
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...