×

தமிழகத்தில் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்?... இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சென்னை: ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று அல்லது நாளை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இதுவரை 3முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 3வது ஊரடங்கு காலம் நாளையுடன் முடிகிறது.  இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘4ம் கட்ட ஊரடங்கு புதிய விதிமுறைகளுடன் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்,’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஊரடங்கு தேவையா என்பது பற்றிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதை இன்றைக்குள் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பெற்ற பிறகே, 4ம் கட்ட ஊரடங்குக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அது வெளியிட உள்ளது. இதனிடையே தமிழகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு பஸ்களை இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. குறைந்த அளவில் முதல்கட்டமாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 3-ல் ஒரு பகுதி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்றோ அல்லது நாளையோ வெளியிடும் என கூறப்படுகிறது.


Tags : phase ,Tamil Nadu , Tamil Nadu, curfew, government buses
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...