×

இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்தியாவிற்கு இலவசமாக வென்டிலேட்டர்கள் கருவிகளை வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், கொரோனவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க 2 நாடுகளும் இணைந்து முயற்சித்து வருவதாது என்றும் கண்ணுக்கு தெரியாத எதிரியை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.  

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:- டொனல்டு டிரம்ப்புக்கு நன்றி, இந்த தொற்றுநோய்க்கு எதிராக நம் அனைவரும் கூட்டாக போராடி வருகிறோம் இதுபோன்ற காலங்களில், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது உலகத்தை ஆரோக்கியமாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும் முடிந்தவரை செய்ய வேண்டியது எப்போதும் முக்கியம். இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Tags : Modi ,Donald Trump , India, America, Friendship, High Power, has, President, Donald Trump, Prime Minister Modi, thank you
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...