×

கொரோனாவால் இந்தியாவில் 5,84,737 பேருக்கு அறுவை சிகிச்சைகள் ரத்து :மன அழுத்தத்தால் மடியும் நோயாளிகள் ..

லண்டன்:: கொரோனாவால் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, எண்ணற்ற மருத்துவமனைகள் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் பணியாற்றும் டாக்டர்களும் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இந்த மருத்துவமனைகளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகம் முழுவதும் இதுவரை 2.8 கோடி அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டோ, தள்ளி வைக்கப்பட்டோ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொரோனா பாதிப்பு நிறைந்த 120 நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  இவ்வாறு ரத்தாகும் அறுவை சிகிச்சைகள் பெரும்பாலானவை புற்றுநோய் அல்லாத நோய் சம்பந்தப்பட்டவை. 12 வாரங்களில் உலகம் முழுவதும் திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சை ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக எலும்பு நோய் தொடர்பான 63 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும். இந்தியாவில் 5 லட்சத்து 84 ஆயிரத்து 737 நோயாளிகள், தங்கள் ஆபரே‌‌ஷன்கள் தள்ளிப்போடப்படும் நிலையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் நீடித்தால் கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும்.

Tags : Coronal ,surgeries ,India , Corona, India, 5,84,737 people, surgery, cancellation, depression, patients
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!