×

விளைநிலங்களுக்குள் புகுந்து ‘விளையாடுது’ கொரோனா பிரச்னையே தீரல யானைகளும் தருதே குடைச்சல்...: கொடைக்கானல் விவசாயிகள் குமுறல்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதி விளைநிலங்களில் யானைக்கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் பேத்துப்பாறை, புலியூர், அஞ்சுவீடு, பாரதி அண்ணாநகர், கோம்பை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பீன்ஸ், அவரை, வாழை, பலா, ஆரஞ்சு, காபி உள்ளிட்டவையே பிரதான விவசாயமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.தற்போது விவசாயிகளின் வேதனையை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, கடந்த சில நாட்களாக இப்பகுதியில் யானைக்கூட்டம் முகாமிட்டு  பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள், மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே கொரோனா பாதிப்பால் வேதனையில் உள்ள எங்களுக்கு, தற்போது யானைக்கூட்டம் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தால் விவசாயத்தையே கைவிடும் நிலை ஏற்படும். இரவுநேரங்களில் ஊருக்குள்ளும் யானைகள் உலா வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Thirala Elephants ,field , Koronal elephants, tiruthe elephants , field ...
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது