×

11, 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரம் :வெறும் கண்களால் பார்க்கலாம் என்கிறது நாசா

வாஷிங்டன் : 11ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான ஸ்வான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.11 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான ஸ்வான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.

இதன் வால் சுமார் ஒரு கோடியே 77 லட்சம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி மற்றும் தூசுக்களால் ஆன இந்த வால் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாக வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.சூரியனை நோக்கிய வழியில் வெப்பமடையும் போது, அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது என்று கூறிய ஆய்வாளர்கள், இந்த வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : NASA , 11, 600, years, one time, solar system, green comet, NASA
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்