×

உலகளவில் பாதிப்பில் 11-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது...இதுவரை 2,752 பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா   வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3970 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 103 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,752 பேர் உயிரிழந்த நிலையில், 30,153  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1068 பேர்    உயிரிழந்துள்ள நிலையில், 6564 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 10,108  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 71 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 2599 பேர் குணமடைந்துள்ளனர்.  3-வது இடத்தில் 9931 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4035 பேர்  குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய 11-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 90 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1018 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 438 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 66 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 8895 பேருக்கு பாதிப்பு; 123 பேர் பலி; 3518 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 818 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 439 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 156 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 576 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 492 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4727 பேருக்கு பாதிப்பு; 125 பேர் பலி; 2677 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 203 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 87 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 672 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 166 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1935 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 305 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 82 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 1056 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 480 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1013 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 513 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1454 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 959 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2461 பேருக்கு பாதிப்பு; 225 பேர் பலி; 829 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2307 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 1252 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4595 பேருக்கு பாதிப்பு; 239 பேர் பலி; 2283 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4057 பேருக்கு பாதிப்பு; 95 பேர் பலி; 2165 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 76 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : India ,Coronal ,casualties , India: Coronal casualties close to 86,000, so far 2,752 killed
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!