×

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்வு கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது: சென்னையில் 30 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 82 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் நேற்று மட்டும் 15,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,26,298 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 15,659 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழக அளவில் 10,81,988 ஆக உயர்ந்துள்ளது.நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 9,469 பேர் ஆண்கள், பெண்கள் 6,190 பேர். 11,065 பேர் குணமடைந்தனர். இதேபோல், 82 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 13,557பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 30 பேர் நேற்று உயிரிழந்தனர்.நேற்றைய மொத்த பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேர், செங்கல்பட்டு 1,242, கோவை 1,038, கடலூர் 218, தருமபுரி 106, திண்டுக்கல்  228, ஈரோடு 313, கள்ளக்குறிச்சி 129, காஞ்சிபுரம் 558, கன்னியாகுமரி 301, கரூர் 116, கிருஷ்ணகிரி  270, மதுரை  603,  நாகப்பட்டினம் 187, நாமக்கல்  298,  நீலகிரி  79, பெரம்பலூர் 15, அரியலூர் 49, புதுக்கோட்டை 116, ராணிப்பேட்டை 285, சேலம் 509, தென்காசி 261, தஞ்சாவூர் 303, சிவகங்கை 75, தேனி 184, திருப்பத்தூர் 100, திருவள்ளூர் 885, திருவண்ணாமலை 370, திருவாரூர் 146, தூத்துக்குடி 432, நெல்லை 549, திருப்பூர் 376, திருச்சி 343, வேலூர் 310, விழுப்புரம் 203, விருதுநகர் 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 10,81,988பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக இறந்தவர்கள் : ‘தமிழகத்தில் நேற்று 82 சிகிச்சை உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் 30, செங்கல்பட்டு 9, கிருஷ்ணகிரி 2, மதுரை 5, ராணிப்பேட்டை 2, தஞ்சாவூர் 2, திருவள்ளூர் 6, திருவண்ணாமலை 2, தூத்துக்குடி 2, திருச்சி 4, வேலூர் 3, விழுப்புரம் 2, விருதுநகர் 2, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம் , நாகப்பட்டிணம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர் என தலா 1 நபர் என 82 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிறந்து 19 நாளே ஆன குழந்தை இறப்பு : கொரோனா தொற்றால் கடந்த 15ம் தேதி பாதிக்கப்பட்ட நிலையில் 22ம் தேதி சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19  நாட்கள் ஆன பெண் குழந்தை 23ம் தேதி காலை 11.50 மணிக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தமிழகத்தில் 82  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நேற்று எந்த வித இணை நோயும் இல்லாத 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்….

The post சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்வு கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது: சென்னையில் 30 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 82 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...