×

மீஞ்சூர் அருகே காரில் ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது

பொன்னேரி: பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத். இவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று முன்தினம் மாலை பழவேற்காடு ஆண்டார்மடம் அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன. அப்போது அவ்வழியே காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட ஆடுகளை தங்களது காருக்குள் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவர் இதனை கண்டு சத்தம் போடவே, கையில் அகப்பட்ட 2 ஆடுகளை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் காட்டூர் அருகே அந்த காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமழிசையை சேர்ந்த அஸ்ரத் (34), அஜய் (22), அஜித்குமார் (22) எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 ஆடுகள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருடிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Minjur Minjur , Minjur, goat, men arrested
× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி